• May 09 2024

சேவல் சண்டையில் மோதல்: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Apr 16th 2023, 8:34 pm
image

Advertisement

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

நாட்டில் உள்ள ஐம்பது மாகாணங்களிலும் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட போது ஒரு சில மாகாணங்களில் மட்டும் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்இ நேற்று முன்தினம் இரவு ஹவாய் தீவு மாகாணத்தின் ஹொனொலுலு நகரில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஏராளமானோர் தங்கள் சேவல்களை களத்தில் இறக்கி விளையாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில், ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அந்த நேரத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சேவல் சண்டையில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  


இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அதன் பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேவல் சண்டையில் மோதல்: இருவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். நாட்டில் உள்ள ஐம்பது மாகாணங்களிலும் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்ட போது ஒரு சில மாகாணங்களில் மட்டும் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்இ நேற்று முன்தினம் இரவு ஹவாய் தீவு மாகாணத்தின் ஹொனொலுலு நகரில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமானோர் தங்கள் சேவல்களை களத்தில் இறக்கி விளையாடி உள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அந்த நேரத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சேவல் சண்டையில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களையும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement