கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் 7 சந்தேக நபர்களுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்தனர்
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்காக விசாரிக்க அனுமதி வழங்குமாறு அத்துருகிரிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரான துலான் சஞ்சுல என்பவரின் வாக்குமூலத்தினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர்,
ஊடகவியலாளர்களை வரவழைத்து பகிரங்க வாக்குமூலம் பெற்று வாக்குமூலத்தை பொது ஊடகங்களில் பிரசாரம் செய்ததாக சந்தேக நபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்ற அவதானத்திற்கு கொண்டுவந்தார்.
குற்றவியல் நீதித்துறையில் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான வழி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், சட்டச் சூழலைப் புறக்கணித்து உரிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதவான், பொலிஸ் விசாரணைகள் நீதியான முறையில் சட்டத்தரணி மற்றும் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
அங்கு சந்தேகநபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொலிஸாரிடம் நீதவான் வினவியதுடன், அதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்ற அடிப்படையில், தடுப்புக்காவலின் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் என கைது செய்யப்பட்டுள்ள துலான் சஞ்சுல என்ற சந்தேக நபரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளப் வசந்த கொலை: சந்தேக நபரின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வழங்கியமை குறித்து கேள்வி கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் 7 சந்தேக நபர்களுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்தனர்சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்காக விசாரிக்க அனுமதி வழங்குமாறு அத்துருகிரிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரான துலான் சஞ்சுல என்பவரின் வாக்குமூலத்தினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஊடகவியலாளர்களை வரவழைத்து பகிரங்க வாக்குமூலம் பெற்று வாக்குமூலத்தை பொது ஊடகங்களில் பிரசாரம் செய்ததாக சந்தேக நபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்ற அவதானத்திற்கு கொண்டுவந்தார்.குற்றவியல் நீதித்துறையில் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான வழி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், சட்டச் சூழலைப் புறக்கணித்து உரிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதவான், பொலிஸ் விசாரணைகள் நீதியான முறையில் சட்டத்தரணி மற்றும் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.இதன்படி, சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.அங்கு சந்தேகநபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொலிஸாரிடம் நீதவான் வினவியதுடன், அதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்ற அடிப்படையில், தடுப்புக்காவலின் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் என கைது செய்யப்பட்டுள்ள துலான் சஞ்சுல என்ற சந்தேக நபரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.