கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 8 பேரையும் பிணையில் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷாதீன் இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் இரண்டு சரீரப் பிணைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த 08 சந்தேக நபர்களும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அத்துரிகிரிய பொலிஸில் கையொப்பமிடுமாறும் கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரி பிரதேசத்தில் பச்சை குத்தும் மைய திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த கிளப் வசந்தவை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிளப் வசந்த கொலைச் சம்பவம்; சந்தேக நபர்களுக்கு பிணை. கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 8 பேரையும் பிணையில் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷாதீன் இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் இரண்டு சரீரப் பிணைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த 08 சந்தேக நபர்களும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அத்துரிகிரிய பொலிஸில் கையொப்பமிடுமாறும் கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரி பிரதேசத்தில் பச்சை குத்தும் மைய திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த கிளப் வசந்தவை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.