• Apr 28 2024

கொழும்பு அரசியலில் பரபரப்பு..! கைமாறும் பொதுஜன பெரமுன தலைமைத்துவம்..? samugammedia

Chithra / Nov 5th 2023, 12:18 pm
image

Advertisement

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது ஜனன தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அண்மை காலமாக நாமல் ராஜபக்ஷவின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெறுமனே வரவு - செலவு திட்டத்தை விமர்சிக்காது மக்கள் மத்தியில் சென்று உண்மைகளை கண்டறியுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அடுத்த வருடம் உத்தேசிக்கப்படுகின்ற தேசிய தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. 

ஆனால் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுமாயின் ராஜபக்ஷ ஒருவரை களமிரக்குவது சாத்தியமில்லை என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும். 

எனவே தான் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் - பொருளாதார கொந்தளிப்புகளின் பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தினர்  தேசிய அரசியலில் நீண்டகாலமாக அமைதியை பின்பற்றியிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறுகிய கால இடைவெளிக்கு பின்னர் கட்சியை  மீண்டும் ஒருங்கிணைத்தும் ஆதரவாளர்களை சந்தித்தும் இருந்தார். 

13 ஆம் திகதி ஜனாதிபதி முன்வைக்கவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவு திட்டம் தொடர்பில் கடந்த வாரத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். 

வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் இல்லா விடின் ஆதரவளிக்க போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்ஷவிடம் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு அரசியலில் பரபரப்பு. கைமாறும் பொதுஜன பெரமுன தலைமைத்துவம். samugammedia  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது ஜனன தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக நாமல் ராஜபக்ஷவின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெறுமனே வரவு - செலவு திட்டத்தை விமர்சிக்காது மக்கள் மத்தியில் சென்று உண்மைகளை கண்டறியுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.அடுத்த வருடம் உத்தேசிக்கப்படுகின்ற தேசிய தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுமாயின் ராஜபக்ஷ ஒருவரை களமிரக்குவது சாத்தியமில்லை என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும். எனவே தான் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு வலியுறுத்தி வருகின்றது.இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் - பொருளாதார கொந்தளிப்புகளின் பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தினர்  தேசிய அரசியலில் நீண்டகாலமாக அமைதியை பின்பற்றியிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறுகிய கால இடைவெளிக்கு பின்னர் கட்சியை  மீண்டும் ஒருங்கிணைத்தும் ஆதரவாளர்களை சந்தித்தும் இருந்தார். 13 ஆம் திகதி ஜனாதிபதி முன்வைக்கவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவு திட்டம் தொடர்பில் கடந்த வாரத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். வரவு - செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் இல்லா விடின் ஆதரவளிக்க போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்ஷவிடம் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement