தமிழினப்படுகொலையின் 13 ஆம் ஆண்டிற்கான நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பல்லாயிரம் மக்கள், எம்.பிக்கள், மதத் தலைவர்கள் என பலர் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வடக்கில் இருந்தும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டியில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.