• Jan 19 2025

27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய நிறுவனங்கள் - ஆரம்பமான விசாரணை

Chithra / Jan 15th 2025, 11:45 am
image

 

கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள், கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியுள்ளன.

இந்நிலையில் இந்த நிறுவனங்கள் மீது  லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,  26 நிறுவனங்களால், 2023ஆம் ஆண்டில், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு 204,164,110 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலுவைத் தொகை இருந்தபோதிலும், அந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாகத்தைப் பெற்றுள்ளன.

இதன்படி, 2024 ஏப்ரல் இறுதிக்குள் அந்த நிறுவனங்கள், மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 264,859,471 ரூபாய்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய நிறுவனங்கள் - ஆரம்பமான விசாரணை  கொழும்பு மாநகர சபையின் கீழ் வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள், கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியுள்ளன.இந்நிலையில் இந்த நிறுவனங்கள் மீது  லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்,  26 நிறுவனங்களால், 2023ஆம் ஆண்டில், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு 204,164,110 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நிலுவைத் தொகை இருந்தபோதிலும், அந்த நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாகத்தைப் பெற்றுள்ளன.இதன்படி, 2024 ஏப்ரல் இறுதிக்குள் அந்த நிறுவனங்கள், மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 264,859,471 ரூபாய்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement