• Apr 02 2025

தேசியப்பட்டியல் விவகாரத்தில் சஜித் கட்சிக்குள் தொடரும் கடும் குழப்பம்..!

Chithra / Nov 19th 2024, 12:08 pm
image

 

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆசனத்திற்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் மற்றும் பலர் சேர்க்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழுவினர் கருதுகின்றனர்.

சுஜீவ சேனசிங்கவின் நியமனத்துக்கும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.

தேசியப்பட்டியல் விவகாரத்தில் சஜித் கட்சிக்குள் தொடரும் கடும் குழப்பம்.  இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் கட்சிக்குள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.ஆனால் அந்த ஆசனத்திற்கு எரான் விக்ரமரத்ன, மனோ கணேசன் மற்றும் பலர் சேர்க்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழுவினர் கருதுகின்றனர்.சுஜீவ சேனசிங்கவின் நியமனத்துக்கும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இத்தேர்தலில் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை அக்கட்சி வென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் இன்றும் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement