• Nov 26 2024

பல கட்சி வேட்பாளர்களால் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க சதி நடைபெறுகிறது- இம்ரான் மஹரூப் தெரிவிப்பு !

Tamil nila / Oct 23rd 2024, 10:11 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் சஜீத் பிரேமதாசவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம் இதனை குறைத்து பிரதிநிதித்துவத்தை குறைக்க பல கட்சிகளும் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் இதனை பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியா பெரியாற்று முனை பகுதியில் இன்று (23) மாலை இடம் பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் 

திருகோணமலை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகளும் 200க்கும்மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பல கிராமங்களில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமையால்  மக்கள் மத்தியில் இது பொதுத் தேர்தலா அல்லது உள்ளூராட்சி மன்ற தேர்தலா என சந்தேகிக்கின்றனர்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்க வைத்து பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க வேண்டும் என்ற சதியை நடாத்துகிறார்கள் எமது வாக்குகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். 

தற்போதைய அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை ஏற்று தடுமாறுகின்றனர் இது எதிர்காலத்தில் புரியும் உரிமைகளுக்காக, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது என்றார்.


பல கட்சி வேட்பாளர்களால் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க சதி நடைபெறுகிறது- இம்ரான் மஹரூப் தெரிவிப்பு திருகோணமலை மாவட்டத்தில் சஜீத் பிரேமதாசவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிக படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம் இதனை குறைத்து பிரதிநிதித்துவத்தை குறைக்க பல கட்சிகளும் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் இதனை பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.கிண்ணியா பெரியாற்று முனை பகுதியில் இன்று (23) மாலை இடம் பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகளும் 200க்கும்மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற சந்தர்ப்பத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.பல கிராமங்களில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமையால்  மக்கள் மத்தியில் இது பொதுத் தேர்தலா அல்லது உள்ளூராட்சி மன்ற தேர்தலா என சந்தேகிக்கின்றனர்.சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்க வைத்து பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க வேண்டும் என்ற சதியை நடாத்துகிறார்கள் எமது வாக்குகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் தவறான கருத்துக்களை ஏற்று தடுமாறுகின்றனர் இது எதிர்காலத்தில் புரியும் உரிமைகளுக்காக, சமூகத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement