• May 11 2024

மட்டு மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூடு...! இருவர் கைது...!samugammedia

Sharmi / Nov 17th 2023, 9:53 am
image

Advertisement

மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேய்ச்சல்தரை பகுதியில் பகுதியில், கால்நடைகள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால், காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வாழைச்சேனை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டு மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூடு. இருவர் கைது.samugammedia மட்டக்களப்பில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேய்ச்சல்தரை பகுதியில் பகுதியில், கால்நடைகள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால், காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தநிலையில், வாழைச்சேனை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement