• Nov 24 2024

தொடரும் யுக்திய நடவடிக்கை...! மேலும் 770 சந்தேக நபர்கள் கைது...! samugammedia

Sharmi / Feb 3rd 2024, 10:41 am
image

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில்  மேலும்  தெரியவருவதாவது,

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில்  போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 132 கிராம் ஹெராயின், 121 கிராம் பனி, கஞ்சா 15 கிலோ 900 கிராம், 5,416 கஞ்சா செடிகள், சாம்பல் 16 கிராம், மாவா 209 கிராம், மதன மோதக 128 கிராம், துல் 45 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில் 21 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 160 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடரும் யுக்திய நடவடிக்கை. மேலும் 770 சந்தேக நபர்கள் கைது. samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில்  மேலும்  தெரியவருவதாவது,நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில்  போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, 132 கிராம் ஹெராயின், 121 கிராம் பனி, கஞ்சா 15 கிலோ 900 கிராம், 5,416 கஞ்சா செடிகள், சாம்பல் 16 கிராம், மாவா 209 கிராம், மதன மோதக 128 கிராம், துல் 45 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில் 21 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 160 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement