• Nov 26 2025

தொடரும் மண்சரிவு அபாயம் - பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள்

Chithra / Nov 25th 2025, 9:19 am
image

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு - ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், தொடரும் அதிக மழை காரணமாக பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 30 பேர் பெட்டிகல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தற்போது மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி எதிர்காலத்தில் திறக்கப்பட்டாலும், போக்குவரத்தை ஒருவழி போக்குவரத்தாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, களுகங்கை, கிங் கங்கை, நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

தெதுறு ஓயா மற்றும் அத்தனகல ஓயாவின் நீர்மட்டமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் மண்சரிவு அபாயம் - பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய மக்கள் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு - ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தொடரும் அதிக மழை காரணமாக பலாங்கொடை - பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 30 பேர் பெட்டிகல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி எதிர்காலத்தில் திறக்கப்பட்டாலும், போக்குவரத்தை ஒருவழி போக்குவரத்தாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, களுகங்கை, கிங் கங்கை, நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தெதுறு ஓயா மற்றும் அத்தனகல ஓயாவின் நீர்மட்டமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement