• May 13 2024

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை! - வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Apr 4th 2023, 10:01 pm
image

Advertisement

கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில்  இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது  இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்படி  ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான வரி பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா மற்றும் எல்.எம்.சாதிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.


மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை - வெளியான அறிவிப்பு samugammedia கல்முனை மாநகர சபை எல்லையினுள் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில்  இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போது  இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி  ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.இக்கலந்துரையாடலில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான வரி பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா மற்றும் எல்.எம்.சாதிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement