தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது.
NPP பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க இதுதொடர்பில் தெரிவிக்கையில்
அந்த காணொளிகளுடன் NPP அல்லது இளங்குமரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
"இதுபோன்ற காணொளிகள் டக் (Tag) செய்யப்படுவதில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த பொறுப்பும் இல்லை. சில இளைஞர்கள் எம்பி இளங்குமரனின் முகநூலில், காணொளிகளை உருவாக்கி டக் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய தமிழ் தேசியவாத பிரசாரப் பாடல் - அரசு அளித்த விளக்கம் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது.NPP பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க இதுதொடர்பில் தெரிவிக்கையில் அந்த காணொளிகளுடன் NPP அல்லது இளங்குமரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்."இதுபோன்ற காணொளிகள் டக் (Tag) செய்யப்படுவதில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த பொறுப்பும் இல்லை. சில இளைஞர்கள் எம்பி இளங்குமரனின் முகநூலில், காணொளிகளை உருவாக்கி டக் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.