• May 01 2025

திருமலையில் 129 நிலையங்களில் வாக்கெண்ணும் பணி: ஏற்பாடுகள் தீவிரம்..!

Sharmi / May 1st 2025, 9:49 am
image

எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வானது நேற்றையதினம்(30)  திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.கே.டி. நிரஞ்சனால் தெளிவூட்டப்பட்டன.

இம்முறை உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129  நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செயலமர்வில்  வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



திருமலையில் 129 நிலையங்களில் வாக்கெண்ணும் பணி: ஏற்பாடுகள் தீவிரம். எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வானது நேற்றையதினம்(30)  திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.கே.டி. நிரஞ்சனால் தெளிவூட்டப்பட்டன.இம்முறை உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129  நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இச்செயலமர்வில்  வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement