• May 17 2024

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

Chithra / May 7th 2023, 5:27 pm
image

Advertisement


சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயற்சி செய்து கைது செய்யப்பட்டவர்கள் அறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டி ஒருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 மற்றும் 14 வயதான சிறுவர்களும் ,16 வயதான சிறுமியும், 38 வயதான ஆண் ஒருவரும் ,37 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் இவர்கள் ஐவரையும் படகில் சட்டவிரோதமாக இந்தியா அழைத்து செல்லவிருந்த மன்னாரை சேர்ந்த படகோட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 10 நபர்கள் இந்தியா - இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளதுடன் அவர்கள் இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கமைய மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்களில் ஒரு கைக்குழந்தை, மூன்று சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.  


சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த அறுவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயற்சி செய்து கைது செய்யப்பட்டவர்கள் அறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டி ஒருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 மற்றும் 14 வயதான சிறுவர்களும் ,16 வயதான சிறுமியும், 38 வயதான ஆண் ஒருவரும் ,37 வயதான பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் இவர்கள் ஐவரையும் படகில் சட்டவிரோதமாக இந்தியா அழைத்து செல்லவிருந்த மன்னாரை சேர்ந்த படகோட்டி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று அதிகாலை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 10 நபர்கள் இந்தியா - இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளதுடன் அவர்கள் இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.இதற்கமைய மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்களில் ஒரு கைக்குழந்தை, மூன்று சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement