• Sep 17 2024

குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுப்பு! samugammedia

Chithra / Jul 14th 2023, 9:57 am
image

Advertisement

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றைய தினம் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெலி ஓயா சப்புமல் தன்ன விகாரை மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரரால் கடந்த 11 ஆம் திகதி செய்யப்பட்ட இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்நது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் “இந்தப் பொங்கல் நிகழ்வானது இனங்களுக்கு குழப்பங்களை விளைவிக்கும் என்றும் குறித்த பகுதியில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” கூறி தடை உத்தரவை கோரினர்.

இருப்பினும் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் செய்ய முயற்சிக்கவில்லை என எதிர் தரப்பால் கூறப்பட்ட நிலையில், வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கவில்லை. 

இவ்வாறான நிலையில் குருந்தூர் மலையில் தமிழ் மக்களால் பொங்கலுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மக்கள் அங்கே சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். 

அதேசமயம், தென் பகுதியில் இருந்து இரண்டு பேருந்துகளில் சிங்கள மக்களும் அங்கு வருகை தந்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை, கலகம் அடக்கும் காவல்துறையினரும் காவல்துறையினரும் இரண்டு பேருந்துகளில் குருந்தூர் மலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுப்பு samugammedia முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றைய தினம் இடம்பெறும் பொங்கல் நிகழ்வுக்கு தடை உத்தரவை வழங்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.வெலி ஓயா சப்புமல் தன்ன விகாரை மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரரால் கடந்த 11 ஆம் திகதி செய்யப்பட்ட இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்நது.இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் “இந்தப் பொங்கல் நிகழ்வானது இனங்களுக்கு குழப்பங்களை விளைவிக்கும் என்றும் குறித்த பகுதியில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” கூறி தடை உத்தரவை கோரினர்.இருப்பினும் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் செய்ய முயற்சிக்கவில்லை என எதிர் தரப்பால் கூறப்பட்ட நிலையில், வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் குருந்தூர் மலையில் தமிழ் மக்களால் பொங்கலுக்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மக்கள் அங்கே சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். அதேசமயம், தென் பகுதியில் இருந்து இரண்டு பேருந்துகளில் சிங்கள மக்களும் அங்கு வருகை தந்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கலகம் அடக்கும் காவல்துறையினரும் காவல்துறையினரும் இரண்டு பேருந்துகளில் குருந்தூர் மலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement