• Sep 08 2024

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றதாம்..! யுத்தம் தான் காரணமா..! அமைச்சர் தகவல் samugammedia

Chithra / Jul 14th 2023, 10:17 am
image

Advertisement

இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.

இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.

மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றதாம். யுத்தம் தான் காரணமா. அமைச்சர் தகவல் samugammedia இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் வடபகுதியில் சொத்துக்கள் பெருமளவில் அழிவடைந்துள்ளன.இதன் காரணமாக, அரசாங்கம் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் முதலான பாரிய கடன் யோசனைத் திட்டங்களை இந்த மாகாணங்களுக்கு கொண்டு வந்தது.இந்த கடன் மூலம் அனைத்து பாதைகளும் புனரமைக்கப்பட்டதுடன் முழுமையாக அகற்றப்பட்டிருந்த தொடருந்து வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டன.மின்சார விநியோகம், தொலைதொடர்பு சேவைகள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பன கொண்டுவரப்பட்டன.உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன் மூலம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.ஜனாதிபதி, மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் இணைந்து கடனை மறுசீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த வெளிநாட்டு கடனை மறுசீரமைத்து நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement