• May 12 2024

நீதிமன்றத் தீர்ப்பு..!நிறைவேற்று அதிகாரத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது..!20ஆவது திருத்தத்திற்கு கை உயர்த்திய எம்.பி குமுறல்.! samugammedia

Sharmi / Jun 13th 2023, 11:09 am
image

Advertisement

மாகாண சபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே பிற்போடப்பட்டுள்ளதாக சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல்,நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது. இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு.நிறைவேற்று அதிகாரத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.20ஆவது திருத்தத்திற்கு கை உயர்த்திய எம்.பி குமுறல். samugammedia மாகாண சபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அரசியல் நோக்கங்களுக்காகவே பிற்போடப்பட்டுள்ளதாக சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல்,நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது. இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement