யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும், யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பதற்காக சமூகம் அளித்திருந்தார்.
இதன் போது நீதிமன்ற நடவடிக்கைளை குழப்பும் விதமாக அவர் செயற்பட்டதால், அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
குறித்த பொலிஸ் அதிகாரியை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
யாழில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றி வரும், யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பதற்காக சமூகம் அளித்திருந்தார்.இதன் போது நீதிமன்ற நடவடிக்கைளை குழப்பும் விதமாக அவர் செயற்பட்டதால், அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த பொலிஸ் அதிகாரியை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.