• Oct 05 2024

சீனாவின் பதிலுக்கு அமையவே கடன் வசதியை பெற முடியும் - நிதி அமைச்சு கவலை! SamugamMedia

Tamil nila / Feb 28th 2023, 2:54 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள கடன் வசதியானது, சீனாவின் பதில்களிலேயே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த விடயத்தில் சீனா சாதகமாகவே பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பதிலுக்கு அமையவே கடன் வசதியை பெற முடியும் - நிதி அமைச்சு கவலை SamugamMedia சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள கடன் வசதியானது, சீனாவின் பதில்களிலேயே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விடயத்தில் சீனா சாதகமாகவே பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement