• May 02 2024

யாழ் செம்மணியில் துடுப்பாட்ட மைதானம்...! அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்...!ஐங்கரநேசன் எச்சரிக்கை...!

Sharmi / Apr 19th 2024, 3:00 pm
image

Advertisement

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானமொன்று அமைப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே ஐங்கரநேசன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(19)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செம்மணி உப்பளப்பகுதி குடாநாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும்.

வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது.

மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது.

கூடவே, மேலதிக நீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.

அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது.

அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும, அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த நிலையான அபிவிருத்தியாக அமையும்.

அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



யாழ் செம்மணியில் துடுப்பாட்ட மைதானம். அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்.ஐங்கரநேசன் எச்சரிக்கை. செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படுமாயின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.செம்மணியில் சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட மைதானமொன்று அமைப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே ஐங்கரநேசன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று(19)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,செம்மணி உப்பளப்பகுதி குடாநாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது.கூடவே, மேலதிக நீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும, அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த நிலையான அபிவிருத்தியாக அமையும்.அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement