• Oct 06 2024

பாலித தெவரப்பெருமவிற்கு ரணில் மற்றும் மகிந்த இறுதி அஞ்சலி..!

Chithra / Apr 19th 2024, 3:02 pm
image

Advertisement

 

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு இன்று(19) விஜயம் செய்து அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்  மறைந்த பாலித தெவரப்பெருமவின்   பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச , 

பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காகவும் அவர்களுக்காகவும் நின்று உழைத்த ஒரு அரசியல்வாதி என் தெரிவித்துள்ளார். 

தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலித தெவரப்பெருமவிற்கு ரணில் மற்றும் மகிந்த இறுதி அஞ்சலி.  மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு இன்று(19) விஜயம் செய்து அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்  மறைந்த பாலித தெவரப்பெருமவின்   பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச , பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காகவும் அவர்களுக்காகவும் நின்று உழைத்த ஒரு அரசியல்வாதி என் தெரிவித்துள்ளார். தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement