• May 18 2024

யாழில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் வடக்கு கிழக்கில் சீனா வேரூன்றுவதற்கான வெள்ளோட்டம் ...!சுப்பிரமணியம் ஆதங்கம்...!samugammedia

Sharmi / Jun 19th 2023, 4:06 pm
image

Advertisement

வடக்கு கிழக்கில், சீனா தனது ஆதிக்கத்தினை செலுத்தி வேரூன்றி நிற்பதற்கான முன்னோட்டமே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது  இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த கடலட்டை பண்ணைகளிற்கும் சீன நிறுவனங்களிற்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதுடன் அது யாழ்ப்பாணத்திலே அவர்களது முதலீட்டிலே இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த கடலட்டை பண்ணைகளினால் வடக்கு கிழக்கில்  சீனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக பலராலும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான உங்களுடைய கருத்து யாது என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில்,
 
சீன நிறுவனத்தின் வெள்ளோட்டமான செயற்பாடே  இதுவாகும்.

அத்துடன், சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கும் வடகிழக்கில் வேரூன்றி நிற்பதற்கான முன்னோட்டமாக இது காணப்படுகின்றது.

மக்களின்  எதிர்ப்புக்களை கண்டவுடன்  வேறு வேறு கதைகளை கூறி ஏமாற்றுகின்றனர். ஆயினும் இதற்கும் சீன நிறுவனத்திற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.

இந்தியா எப்பொழுதும் தனது நேச நாடான இலங்கையை தனது கையிற்குள் வைத்து இருக்கவே விரும்பும். இருந்தும் இந்தியாவின் எதிரியான சீனா இலங்கைக்குள் வருவதை அந்த நாடு விரும்பாது.

அவ்வாறான நிலையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வெளிக்காட்டா   விடிலும் உள்ளே சின்ன விரிசல் காணப்படும்.

மோடி எமது நாட்டிலுள்ள வளங்களை பாதுகாப்பதற்கு அப்பால் எமது நாடு எம்முடைய கடல் வளங்களை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகள் வடக்கு கிழக்கில் சீனா வேரூன்றுவதற்கான வெள்ளோட்டம் .சுப்பிரமணியம் ஆதங்கம்.samugammedia வடக்கு கிழக்கில், சீனா தனது ஆதிக்கத்தினை செலுத்தி வேரூன்றி நிற்பதற்கான முன்னோட்டமே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது  இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். சீன நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த கடலட்டை பண்ணைகளிற்கும் சீன நிறுவனங்களிற்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதுடன் அது யாழ்ப்பாணத்திலே அவர்களது முதலீட்டிலே இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த கடலட்டை பண்ணைகளினால் வடக்கு கிழக்கில்  சீனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக பலராலும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான உங்களுடைய கருத்து யாது என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில்,  சீன நிறுவனத்தின் வெள்ளோட்டமான செயற்பாடே  இதுவாகும். அத்துடன், சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கும் வடகிழக்கில் வேரூன்றி நிற்பதற்கான முன்னோட்டமாக இது காணப்படுகின்றது. மக்களின்  எதிர்ப்புக்களை கண்டவுடன்  வேறு வேறு கதைகளை கூறி ஏமாற்றுகின்றனர். ஆயினும் இதற்கும் சீன நிறுவனத்திற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. இந்தியா எப்பொழுதும் தனது நேச நாடான இலங்கையை தனது கையிற்குள் வைத்து இருக்கவே விரும்பும். இருந்தும் இந்தியாவின் எதிரியான சீனா இலங்கைக்குள் வருவதை அந்த நாடு விரும்பாது. அவ்வாறான நிலையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வெளிக்காட்டா   விடிலும் உள்ளே சின்ன விரிசல் காணப்படும்.மோடி எமது நாட்டிலுள்ள வளங்களை பாதுகாப்பதற்கு அப்பால் எமது நாடு எம்முடைய கடல் வளங்களை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement