• May 18 2024

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள்: மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்!

Sharmi / Dec 3rd 2022, 5:46 pm
image

Advertisement

2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

2021 க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று (02) வெளியிடப்பட்டன.

வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், இவ்வருடம் 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு அதிகளவிலான மாணவர்கள் தெரிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள்: மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம் 2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.2021 க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று (02) வெளியிடப்பட்டன.வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், இவ்வருடம் 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.இந்த ஆண்டு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.பல்கலைக்கழகத்திற்கு அதிகளவிலான மாணவர்கள் தெரிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement