• May 19 2024

12 மணிநேரம் நீர்வெட்டு! - இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு! SamugamMedia

Chithra / Feb 18th 2023, 11:21 am
image

Advertisement


வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும்.

களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

12 மணிநேரம் நீர்வெட்டு - இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.மேலும், ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும்.களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement