• May 02 2024

அபாயகரமான மூலப்பொருட்களுடன் கொழும்புக்கு வரவிருந்த டாலி ...! சபையில் சஜித் பகிரங்கம்...!

Sharmi / Apr 2nd 2024, 12:49 pm
image

Advertisement

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி அபாயகரமான மூலப்பொருட்கள் அடங்கிய அடங்கிய 'டாலி'  எனப்படும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்றைய(02) பாராளுமன்ற அமர்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்கு பல்வேறுபட்ட அபாயகரமான மூலப்பொருட்களை உள்ளடக்கிய கொள்கலன்கள் கொண்டுவரப்படுகின்றது. அது எவ்வாறு கொண்டுவரப்படுகின்றது?  எவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக முறையான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.

 பொருட்களை கொண்டு செல்லும் டாலி எனப்படும் கப்பல்  இலங்கைக்கு அபாயகரமான சுமார் 864 டொன்களை ஏற்றிக்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைத்திருக்கின்றது.

இந்த கப்பலின் கொல்கலன்கள் சுமார் 4800 காணப்படுவதாகவும் அறியக்கிடைத்திருக்கின்றது. அந்த 4800 கொல்கலன்களில் 56 கொள்கலன்களில்,  வெடிபொருட்களுக்குரிய லித்தியம் பற்றி எனப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சுலபமாக தீப்பற்றக்கூடிய பொருட்கள்  பல அபாயகரமான பொருட்கள் மற்றும் ஒன்பதாவது கிளாஸ் நைன் எனப்படக்கூடிய அபாயகரமான பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது.

அத்தோடு ஏனைய 4644 கொல்கலன்களிலும்  எவ்வாறான அபாயகரமான பொருட்கள் காணப்படுகிறது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன. 

டாலி கப்பலானது உலகத்திலே பாரிய கப்பல் நிவ்யோ முகாமிற்கு போன பின்னரே அடுத்த பயண நிறைவிடமாக கொழும்புத் துறைமுகத்தை எடுத்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். 

ஒரு கப்பலானது பொருட்களை   உள்ளீடு செய்யும் போது , ஏற்றுமதி செய்யும் போது ,துறைமுகத்திலிருந்து இடைநிறுத்தி மீண்டும் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு செயற்பாட்டின் போது,  ஒரு கப்பலில் இருந்து இன்னுமொரு கப்பலுக்கு பொருட்களை பரிமாற்றம் செய்வது தொடர்பான நான்கு சந்தர்ப்பங்களின்   அடிப்படையில்  மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். 

ஆனால்  இக்கப்பலானது எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பான முறையான விசாரணையொன்று தேவை 

மேலும் எங்களது  நாட்டில் யாரும் அறியாத இவ்வாறான பொருட்கள் பொது விளைவை ஏற்படுத்துகின்றது.  மோசமான நிலைமையாக காணப்படுகின்றது.

 இது தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.  எவ்வாறு மத்திய சுற்றாடல் அனுமதியின்றி எமது நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றது.  எவ்வாறு ஏற்றப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக மிகத் தெளிவாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

அபாயகரமான மூலப்பொருட்களுடன் கொழும்புக்கு வரவிருந்த டாலி . சபையில் சஜித் பகிரங்கம். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியின்றி அபாயகரமான மூலப்பொருட்கள் அடங்கிய அடங்கிய 'டாலி'  எனப்படும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய(02) பாராளுமன்ற அமர்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது நாட்டுக்கு பல்வேறுபட்ட அபாயகரமான மூலப்பொருட்களை உள்ளடக்கிய கொள்கலன்கள் கொண்டுவரப்படுகின்றது. அது எவ்வாறு கொண்டுவரப்படுகின்றது  எவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக முறையான விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தனது கருத்துக்களை முன்வைத்தார். பொருட்களை கொண்டு செல்லும் டாலி எனப்படும் கப்பல்  இலங்கைக்கு அபாயகரமான சுமார் 864 டொன்களை ஏற்றிக்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைத்திருக்கின்றது. இந்த கப்பலின் கொல்கலன்கள் சுமார் 4800 காணப்படுவதாகவும் அறியக்கிடைத்திருக்கின்றது. அந்த 4800 கொல்கலன்களில் 56 கொள்கலன்களில்,  வெடிபொருட்களுக்குரிய லித்தியம் பற்றி எனப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சுலபமாக தீப்பற்றக்கூடிய பொருட்கள்  பல அபாயகரமான பொருட்கள் மற்றும் ஒன்பதாவது கிளாஸ் நைன் எனப்படக்கூடிய அபாயகரமான பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது. அத்தோடு ஏனைய 4644 கொல்கலன்களிலும்  எவ்வாறான அபாயகரமான பொருட்கள் காணப்படுகிறது என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன. டாலி கப்பலானது உலகத்திலே பாரிய கப்பல் நிவ்யோ முகாமிற்கு போன பின்னரே அடுத்த பயண நிறைவிடமாக கொழும்புத் துறைமுகத்தை எடுத்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டார். ஒரு கப்பலானது பொருட்களை   உள்ளீடு செய்யும் போது , ஏற்றுமதி செய்யும் போது ,துறைமுகத்திலிருந்து இடைநிறுத்தி மீண்டும் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு செயற்பாட்டின் போது,  ஒரு கப்பலில் இருந்து இன்னுமொரு கப்பலுக்கு பொருட்களை பரிமாற்றம் செய்வது தொடர்பான நான்கு சந்தர்ப்பங்களின்   அடிப்படையில்  மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.  ஆனால்  இக்கப்பலானது எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பான முறையான விசாரணையொன்று தேவை மேலும் எங்களது  நாட்டில் யாரும் அறியாத இவ்வாறான பொருட்கள் பொது விளைவை ஏற்படுத்துகின்றது.  மோசமான நிலைமையாக காணப்படுகின்றது.  இது தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.  எவ்வாறு மத்திய சுற்றாடல் அனுமதியின்றி எமது நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றது.  எவ்வாறு ஏற்றப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக மிகத் தெளிவாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement