• May 20 2024

கிளிநொச்சியின் முக்கிய வீதியில் ஆபத்து..!இடர் முகாமைத்துவ நிலையம் எடுத்த நடவடிக்கை..!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 2:22 pm
image

Advertisement

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட 18 பாடசாலை வீதியோர மரங்களை அகற்றவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு சென்ற மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச மரக்கூட்டுத்தாபன அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நிலைமைகளை பார்வையிட்டனர்.

இந்த நிலையில், பாடசாலையின் பிரதான வீதியில் 100 ஆண்டுகளிற்கு மேல் கடந்ததான பழமையான மரங்களில் 18 மரங்களை அகற்றுவதற்கும், அதற்கு பதிலாக புதிய மரங்களை நாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று குறித்த பாடசாலையின் தற்காலிக வகுப்பறை தொகுதி காற்றினால் சேதமடைந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியின் முக்கிய வீதியில் ஆபத்து.இடர் முகாமைத்துவ நிலையம் எடுத்த நடவடிக்கை.samugammedia கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.மேலும், ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட 18 பாடசாலை வீதியோர மரங்களை அகற்றவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு சென்ற மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச மரக்கூட்டுத்தாபன அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நிலைமைகளை பார்வையிட்டனர்.இந்த நிலையில், பாடசாலையின் பிரதான வீதியில் 100 ஆண்டுகளிற்கு மேல் கடந்ததான பழமையான மரங்களில் 18 மரங்களை அகற்றுவதற்கும், அதற்கு பதிலாக புதிய மரங்களை நாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதேவேளை, நேற்று குறித்த பாடசாலையின் தற்காலிக வகுப்பறை தொகுதி காற்றினால் சேதமடைந்தது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement