• May 18 2024

IMF உதவி கிடைப்பதில் தாமதம்; நெருக்கடியில் இலங்கையர்கள்! – அமைச்சர் செஹான்

IMF
Chithra / Jan 14th 2023, 11:47 am
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தாமதப்படுத்திய இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் உத்தரவாதங்களைப் பெற முடியாமல் போனமை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் விரைவாக உடன்படிக்கைகளை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி மற்றும் நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடனுதவியை பெற்றுக்கொள்வதற்க்கான பேச்சுவார்தைகள் தொடர்ந்தாலும் தொழில்நுட்ப விடயங்களில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையும், அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் மக்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பரஸ்பர புரிதல் மூலம், இந்த செயல்முறையின் இறுதி கட்டம் விரைவில் நடைபெறும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களின் கணிசமான தலையீடு அவசியம் என்றும் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

IMF உதவி கிடைப்பதில் தாமதம்; நெருக்கடியில் இலங்கையர்கள் – அமைச்சர் செஹான் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தாமதப்படுத்திய இருதரப்பு கடனாளர்களிடமிருந்து கடன் உத்தரவாதங்களைப் பெற முடியாமல் போனமை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் விரைவாக உடன்படிக்கைகளை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி மற்றும் நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கடனுதவியை பெற்றுக்கொள்வதற்க்கான பேச்சுவார்தைகள் தொடர்ந்தாலும் தொழில்நுட்ப விடயங்களில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையும், அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் மக்களிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் பரஸ்பர புரிதல் மூலம், இந்த செயல்முறையின் இறுதி கட்டம் விரைவில் நடைபெறும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களின் கணிசமான தலையீடு அவசியம் என்றும் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement