• Apr 28 2024

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவு- மஹிந்த கருத்து!SamugamMedia

Sharmi / Feb 16th 2023, 9:40 pm
image

Advertisement

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்ககுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (16) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தில் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

6 மாவட்டங்களின் வேலைகள் 50 வீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களில் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் காரணமாக 8800 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை 5100- 5900 ஆக குறைக்க முடியும் என நம்புகின்றேன். இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளோம். இறுதி அறிக்கை மார்ச் 25 தொடக்கம் 31 இற்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். 



உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவு- மஹிந்த கருத்துSamugamMedia உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்ககுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (16) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தில் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. 6 மாவட்டங்களின் வேலைகள் 50 வீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களில் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் காரணமாக 8800 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை 5100- 5900 ஆக குறைக்க முடியும் என நம்புகின்றேன். இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளோம். இறுதி அறிக்கை மார்ச் 25 தொடக்கம் 31 இற்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement