யாழ் ஜெய்ப்பூர் உற்பத்தி நிலையத்திற்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!( படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஜெய்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான மாற்றீடு அங்கங்கள் பொருத்தப்படுகின்றன.

மேற்படி மாற்றீடு அங்கங்கள் யாழ் ஜெய்ப்பூர் நிலையத்திலேயே தயாரிக்கப்படுகின்றன .

மேற்படி உற்பத்தி நிலையத்தின் ஊழியர்களாக கடமையாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கவீனமுற்றவர்களே ! எனவே இவற்றை கருத்தில் கொண்டும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டும் சூழலியல் மேம்பாடு அமைவனம் – Soozhagam – சூழகம் செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் நிதியுதவியும் , உலருணவு பொதிகளும் வழங்கப்பட்டன .

யாழ் ஜெய்பூர் புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக தயாரித்து பொருத்தப்படும் அங்கங்களை மென்மேலும் வினைத்திறனுடன் உற்பத்தி செய்து தமிழின உரிமைக்கான போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு உதவும் நோக்குடன் நிலைய நிர்வாகத்தினரிடம் ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ( 140000/=) இன்று கையளிக்கப்பட்டது.

புங்குடுதீவை சேர்ந்த சண்முகலிங்கம் தம்பதியினர் தமது புதல்வரின் ஞாபகார்த்தமாக இந்நிதியுதவியினை வழங்கியிருந்தனர்.

அத்தோடு இங்கு கடமையாற்றுகின்ற 11 ஊழியர்களுக்கும் ரூபாய் 60000 பெறுமதிமிக்க உலருணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன .

புங்குடுதீவை சேர்ந்த சுரேன் மற்றும் ராஜி ஆகியோரின் நிதியுதவியில் மேற்படி உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்படிருந்தன .

மேற்படி இரு செயற்பாடுகளுக்கான நிதியுதவிகளும் செந்தில் சண்முகலிங்கம் (கனடா ) ஊடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்வில் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரிகளான வைத்தியர் கணேசமூர்த்தி , ஹெலன் தேவராசா , சுஜிதா ரவிராஜ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை