• Jan 24 2025

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்!

Chithra / Jan 5th 2025, 11:12 am
image

 ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில்  ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதற்தடைவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும்  விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில்  ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் முதற்தடைவையாக கூடியுள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கும்  விதம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கலந்துரையாடலில் பராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement