• May 19 2024

ஜனநாயக போராட்டம் பயங்கரவாதமாக சித்திரிக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு! samugammedia

raguthees / Apr 18th 2023, 1:18 am
image

Advertisement

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இதனை  தெரிவித்துள்ளார். இத்துதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும்போது சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும். மக்கள் போராட்டம், எதிர்ப்பு ஆகியவற்றில் இருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.

சட்டமூல வரைபில் ஜனநாயகத்துக்கு எதிராக உள்வாங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பல தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் தீர்மானத்தை நீதியமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பில் சிவில் தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள். எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க நீதிமன்றத்தை நிச்சயம் நாடுவோம்  என்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயக போராட்டம் பயங்கரவாதமாக சித்திரிக்கப்படும்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு samugammedia உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இதனை  தெரிவித்துள்ளார். இத்துதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும்போது சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும். மக்கள் போராட்டம், எதிர்ப்பு ஆகியவற்றில் இருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.சட்டமூல வரைபில் ஜனநாயகத்துக்கு எதிராக உள்வாங்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பல தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் தீர்மானத்தை நீதியமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பில் சிவில் தரப்பினருடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூட பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள். எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க நீதிமன்றத்தை நிச்சயம் நாடுவோம்  என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement