• May 03 2024

யாழில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் கல்வித்திணைக்களம்..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 12:53 pm
image

Advertisement

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரி விண்ணப்பித்தவரிடம் கிராம அலுவலகர் ஊடாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியால் வழங்கப்படும் உரிய சான்றுப்பத்திரம் ஆகியவற்றை வழங்குமாறு யாழ். வலயப் பணிப்பாளராக கடமையில் இருந்த பொழுது மு.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி தொடர்பான சில தகவல்களை ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக யாழ்.வலயக் கல்வி பணிமனையில் கோரியுள்ளார்.

இதற்கு வலயக் கல்வி பணிமனையின் தகவல் அலுவலகருக்கு பதிலாக குறித்தளிக்கப்பட்ட அலுவலகரான யாழ்.வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் கையேழுத்திட்டு பதில் அனுப்பியுள்ளார்.

அதில், கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்,  தகவல் கோரியவரின் கிராம அலுவலகர் ஊடாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியால் வழங்கப்படும் உரிய சான்றுப்பத்திரம் ஆகியவற்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு வலயக் கல்வி பணிப்பாளர் ஊடாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரி தொடர்பிலான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற விரும்பின் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தகவல்களை கோருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து 6 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், சட்டம் தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளருக்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ அது தொடர்பில் விளக்கம் இல்லாது இருப்பதே இந்த பதிவின் மூலம் தெரிய வருகின்றது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பாகம்  5 இல், தகவல் அலுவலர்களின் நியமனமும் தகவலுக்கு அணுக்கம் பெறுவதற்கான நடவடிக்கை முறையும் என்ற தலைப்பில் 24 (5) (ஈ) என்னும்  உட்பிரிவில் தகவல் கோரிக்கையாளரை  தொடர்பு கொள்வதற்கு அவசியமாக இருக்கக்கூடிய தகவல்  தவிர,தகவல் தேவைப்படுவதற்கான  ஏதேனும்  காரணம் அல்லது வேறு ஏதேனும்  தனிப்பட்ட விவரங்களை கொடுக்கும்படி தேவைப்படுத்தல் ஆகாது  என்று தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தகவல் அறியும் உரிமை கோரிக்கை ஊடாக இலங்கை இராணுவத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட  கோரிக்கைக்கு,கோரிக்கையாளரின் தேசிய அடையாள அட்டையை கிராம அலுவலர், பிரதேச செயலகத்திடம் உறுதிப்படுத்தி அனுப்புமாறு இராணுவம் கோரியத்தை தகவல் கோரிக்கையாளர் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்.

அதன் போதான விசாரணையில், அவ்வாறு கோரக்கூடாது என்று ஆணைக்குழு இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் கல்வித்திணைக்களம்.samugammedia தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரி விண்ணப்பித்தவரிடம் கிராம அலுவலகர் ஊடாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியால் வழங்கப்படும் உரிய சான்றுப்பத்திரம் ஆகியவற்றை வழங்குமாறு யாழ். வலயப் பணிப்பாளராக கடமையில் இருந்த பொழுது மு.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி தொடர்பான சில தகவல்களை ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக யாழ்.வலயக் கல்வி பணிமனையில் கோரியுள்ளார். இதற்கு வலயக் கல்வி பணிமனையின் தகவல் அலுவலகருக்கு பதிலாக குறித்தளிக்கப்பட்ட அலுவலகரான யாழ்.வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் கையேழுத்திட்டு பதில் அனுப்பியுள்ளார். அதில், கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர்,  தகவல் கோரியவரின் கிராம அலுவலகர் ஊடாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம், வாக்காளர் இடாப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதி மற்றும் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியால் வழங்கப்படும் உரிய சான்றுப்பத்திரம் ஆகியவற்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு வலயக் கல்வி பணிப்பாளர் ஊடாக மாகாண கல்வி பணிப்பாளரிடம் கோரியுள்ளார். கொக்குவில் இந்துக் கல்லூரி தொடர்பிலான தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற விரும்பின் கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தகவல்களை கோருமாறு குறிப்பிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து 6 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், சட்டம் தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளருக்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ அது தொடர்பில் விளக்கம் இல்லாது இருப்பதே இந்த பதிவின் மூலம் தெரிய வருகின்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பாகம்  5 இல், தகவல் அலுவலர்களின் நியமனமும் தகவலுக்கு அணுக்கம் பெறுவதற்கான நடவடிக்கை முறையும் என்ற தலைப்பில் 24 (5) (ஈ) என்னும்  உட்பிரிவில் தகவல் கோரிக்கையாளரை  தொடர்பு கொள்வதற்கு அவசியமாக இருக்கக்கூடிய தகவல்  தவிர,தகவல் தேவைப்படுவதற்கான  ஏதேனும்  காரணம் அல்லது வேறு ஏதேனும்  தனிப்பட்ட விவரங்களை கொடுக்கும்படி தேவைப்படுத்தல் ஆகாது  என்று தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை தகவல் அறியும் உரிமை கோரிக்கை ஊடாக இலங்கை இராணுவத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட  கோரிக்கைக்கு,கோரிக்கையாளரின் தேசிய அடையாள அட்டையை கிராம அலுவலர், பிரதேச செயலகத்திடம் உறுதிப்படுத்தி அனுப்புமாறு இராணுவம் கோரியத்தை தகவல் கோரிக்கையாளர் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து சவாலுக்கு உட்படுத்தியிருந்தார். அதன் போதான விசாரணையில், அவ்வாறு கோரக்கூடாது என்று ஆணைக்குழு இராணுவத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement