அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.
பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் பொதுமக்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்ப்பதிலும், பொய்களை அள்ளிவீசுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டுக்கு எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
அதேநேரம் முன்னைய அரசாங்கம் மிகச் சிறப்பான முறையில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. நாடு முழுவதும் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்று வந்தது.
ஆனால் இந்த அரசாங்கத்தில் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. என கூறியுள்ளார்.
அநுர அரசில் அபிவிருத்திப் பணிகள் முற்றாக முடக்கம் விமர்சித்த சாகர காரியவசம் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பொதுமக்கள் மத்தியில் பகைமை உணர்வை வளர்ப்பதிலும், பொய்களை அள்ளிவீசுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டுக்கு எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.அதேநேரம் முன்னைய அரசாங்கம் மிகச் சிறப்பான முறையில் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வந்தது. நாடு முழுவதும் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்று வந்தது.ஆனால் இந்த அரசாங்கத்தில் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. என கூறியுள்ளார்.