சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று(20) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார் எனவும், விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது எதையோ எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவியை எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை- திலகரத்ன டில்ஷான் தெரிவிப்பு சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று(20) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார் எனவும், விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது எதையோ எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.