• May 18 2024

மக்களை அடக்க எஸ்.ரி.எவ்ஐ வரவழைத்ததா தோட்ட நிர்வாகம்? – இறம்பொடையில் பதற்றம் samugammedia

Chithra / Jul 12th 2023, 2:50 pm
image

Advertisement

இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் தமது தோட்டத்துக்கு வந்தை  தோட்ட மக்கள் உறுதிப்படுத்திய நிலையில், தொழிலாளர்களுடன் தோட்ட நிர்வாகத்தினர் இன்று மாலை பேச்சு நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இச்சந்திப்பு மாலை 3 மணிக்கு தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே விசேட அதிரடிப்படையினர் இன்று முற்பகல் அங்கு சென்றுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது.

தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்படாமல் இருப்பதால் அந்த விடயம் உட்பட தொழில் உரிமைகளைக்கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலைக்கு வராவிட்டால், சுய விருப்பின் பேரில் வேலையை விட்டு விலகியவராக கருதி, தோட்ட பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்படும் எனவும், தோட்ட லயன் அறைகள் மீள நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எனக் கூறப்படும் தரப்பால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இக்கடிதம் வெளியான பிறகு, அந்த தோட்ட விவகாரம் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இக்கடிதம் தொடர்பில் தோட்ட மக்கள் இன்று கொத்மலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தாம் ஏன் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் எனவும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது தொடர்பிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு நிலைவரம் பற்றி ஆராயவே தாம் வந்ததாக தோட்ட மக்களிடம் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். தற்போது தோட்டத்தில் இருந்து வெளியெறியுள்ளனர் என அறியமுடிகின்றது.

இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது, விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றது தொடர்பில் தமக்கு தெரியாது, ஆனால் அந்த தோட்டம் தொடர்பில் மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மக்களை அடக்க எஸ்.ரி.எவ்ஐ வரவழைத்ததா தோட்ட நிர்வாகம் – இறம்பொடையில் பதற்றம் samugammedia இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.விசேட அதிரடிப்படையினர் தமது தோட்டத்துக்கு வந்தை  தோட்ட மக்கள் உறுதிப்படுத்திய நிலையில், தொழிலாளர்களுடன் தோட்ட நிர்வாகத்தினர் இன்று மாலை பேச்சு நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.இச்சந்திப்பு மாலை 3 மணிக்கு தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே விசேட அதிரடிப்படையினர் இன்று முற்பகல் அங்கு சென்றுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது.தமக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன செலுத்தப்படாமல் இருப்பதால் அந்த விடயம் உட்பட தொழில் உரிமைகளைக்கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் வேலைக்கு வராவிட்டால், சுய விருப்பின் பேரில் வேலையை விட்டு விலகியவராக கருதி, தோட்ட பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்படும் எனவும், தோட்ட லயன் அறைகள் மீள நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எனக் கூறப்படும் தரப்பால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இக்கடிதம் வெளியான பிறகு, அந்த தோட்ட விவகாரம் பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.இக்கடிதம் தொடர்பில் தோட்ட மக்கள் இன்று கொத்மலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தாம் ஏன் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் எனவும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது தொடர்பிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.பாதுகாப்பு நிலைவரம் பற்றி ஆராயவே தாம் வந்ததாக தோட்ட மக்களிடம் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். தற்போது தோட்டத்தில் இருந்து வெளியெறியுள்ளனர் என அறியமுடிகின்றது.இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு வினவியபோது, விசேட அதிரடிப்படையினர் அங்கு சென்றது தொடர்பில் தமக்கு தெரியாது, ஆனால் அந்த தோட்டம் தொடர்பில் மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement