• Mar 17 2025

ரணிலுடன் ஆட்சி செய்த போது அநுரவிற்கு படலந்த நினைவிற்கு வரவில்லையா..! கேள்வியெழுப்பிய பிரேம்நாத்

Chithra / Mar 17th 2025, 10:37 am
image


நல்லாட்சி அரசில் ரணிலுடன்  இணைந்து ஆட்சி செய்தபோது நினைவிற்கு வராத படலந்த படுகொலை அறிக்கை மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா வந்தது என ஜனாதிபதி அநுரவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தங்களது கட்சி உறுப்பினர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக ஜே.வி.பியினர் கூறும் படலந்த தொடர்பில் மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா அநுர குமார திஸாநாயக்கவுக்கு நினைவுக்கு வந்தது

நல்லாட்சி அரசில் ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து ஆட்சி செய்த போது அநுர குமார, பிமல் ரத்னாயக குழுவிற்கு படலந்தை கொமிஷன் நினைவுக்கு வரவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.

88/89 காலத்தில் ஜே.வி.பி., அரச வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தையும் அவர்கள் செய்த கொலைகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.

ரணிலுடன் ஆட்சி செய்த போது அநுரவிற்கு படலந்த நினைவிற்கு வரவில்லையா. கேள்வியெழுப்பிய பிரேம்நாத் நல்லாட்சி அரசில் ரணிலுடன்  இணைந்து ஆட்சி செய்தபோது நினைவிற்கு வராத படலந்த படுகொலை அறிக்கை மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா வந்தது என ஜனாதிபதி அநுரவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தங்களது கட்சி உறுப்பினர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக ஜே.வி.பியினர் கூறும் படலந்த தொடர்பில் மஹ்தி ஹசனின் பேட்டிக்கு பின்னரா அநுர குமார திஸாநாயக்கவுக்கு நினைவுக்கு வந்ததுநல்லாட்சி அரசில் ரணில் விக்ரமசிங்கவோடு இணைந்து ஆட்சி செய்த போது அநுர குமார, பிமல் ரத்னாயக குழுவிற்கு படலந்தை கொமிஷன் நினைவுக்கு வரவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.88/89 காலத்தில் ஜே.வி.பி., அரச வங்கிகளில் கொள்ளையடித்த பணத்தையும் அவர்கள் செய்த கொலைகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement