• May 18 2024

அமைச்சு பதவிகளை ஏற்றோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையா..? மைத்திரியின் அதிரடி முடிவு! samugammedia

Chithra / Jun 12th 2023, 9:25 pm
image

Advertisement

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை ஏற்ற 6 பேருக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என, அந்த கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த தகவலை அறியப்படுத்தியுள்ளார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோருக்கு அவர் கடிதம் மூலம் இந்த விடயத்தை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை ஏற்றமைக்காக அவர்களுக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் முன்னதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

எனினும், அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழக்கொன்றை தொடர்ந்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

குறித்த உத்தரவிற்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இறுதியாக இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சு பதவிகளை ஏற்றோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையா. மைத்திரியின் அதிரடி முடிவு samugammedia ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை ஏற்ற 6 பேருக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என, அந்த கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த தகவலை அறியப்படுத்தியுள்ளார்.அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோருக்கு அவர் கடிதம் மூலம் இந்த விடயத்தை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சு பதவிகளை ஏற்றமைக்காக அவர்களுக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் முன்னதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.எனினும், அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழக்கொன்றை தொடர்ந்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.குறித்த உத்தரவிற்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் இறுதியாக இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன முற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement