• Nov 25 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

Sharmi / Oct 2nd 2024, 10:25 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதேநேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது பற்றி ரவூப் ஹக்கீம் நேற்று இரவு கலந்துரையாடலில் ஈடுப்பட்டார். 

இதன்போது முன்னாள் கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

குறித்த கலந்துரையாடல் நேற்று இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது. 

புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். 

இதிலே மூன்று விவகாரஙகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. 

குறிப்பாக இன்று பரவலாக புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் இல்லாததன் காரணமாக கடந்த முறை எல்லா அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை பெறுகின்ற வாய்ப்பு இருந்ததை அடிப்படையாக வைத்து அதேமுறையில் மீண்டும் ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்த அமைப்பினரோடு சந்திப்பதற்கு நாங்கள் வரவேண்டும் என்பதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதுகுறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனவே, இந்த சந்திப்பை நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அதே நேரம் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதே நேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் சில நாட்களில் உறுதியான தீர்மானங்களை நாங்கள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதேநேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது பற்றி ரவூப் ஹக்கீம் நேற்று இரவு கலந்துரையாடலில் ஈடுப்பட்டார். இதன்போது முன்னாள் கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடல் நேற்று இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது. புத்தளம் மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த ஒரு கலந்துரையாடலை நாங்கள் நடாத்தி இருக்கிறோம். இதிலே மூன்று விவகாரஙகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக இன்று பரவலாக புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் இல்லாததன் காரணமாக கடந்த முறை எல்லா அமைப்புகளும் கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தினால் ஒரு உறுப்பினரை பெறுகின்ற வாய்ப்பு இருந்ததை அடிப்படையாக வைத்து அதேமுறையில் மீண்டும் ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்த அமைப்பினரோடு சந்திப்பதற்கு நாங்கள் வரவேண்டும் என்பதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.எனவே, இந்த சந்திப்பை நடாத்துவதற்கு நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அதே நேரம் எங்களுடைய கட்சியினர் தனித்து கேட்பதற்கும் அதே நேரம் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியோடு நாடு முழுவதிலும் நாங்கள் சேர்ந்து கேட்பதான பொதுவான தீர்மானத்திற்கும் பாதகமில்லாமல் நாங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருக்கிறோம் சில நாட்களில் உறுதியான தீர்மானங்களை நாங்கள் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement