கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை பிரதேசத்தில் செயற்படுத்தும் பொருட்டு அதனை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றையதினம்(20) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அந்த வகையில் எதிர்வரும் 26ஆம் திகதி சம்மாந்துறை பிரதேசம் பூராக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
குறிப்பாக கல்லரிச்சல் பிரதேசம்,மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம்,அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் ஆகிய மூன்று இடங்களிலும் பிரதானமாக கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெறவுள்ளன.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் டாக்டர் கமல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி முனாஸீர்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் எம் புஹாரி,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ,கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத்,வீரமுனை இரானுவ முகாம் பொறுப்பதிகாரி கேப்டன் டி.டி.பி.விஜேயசேன,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் தொடர்பில் சம்மாந்துறையில் கலந்துரையாடல். கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத் திட்டத்தினை வினைதிறன் மிக்கதாக சம்மாந்துறை பிரதேசத்தில் செயற்படுத்தும் பொருட்டு அதனை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றையதினம்(20) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.அந்த வகையில் எதிர்வரும் 26ஆம் திகதி சம்மாந்துறை பிரதேசம் பூராக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.குறிப்பாக கல்லரிச்சல் பிரதேசம்,மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம்,அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் ஆகிய மூன்று இடங்களிலும் பிரதானமாக கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் நடைபெறவுள்ளன.இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் டாக்டர் கமல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.பி முனாஸீர்,உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ரிசாட் எம் புஹாரி,சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ,கே.முஹம்மட், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி எஸ் ஜெயலத்,வீரமுனை இரானுவ முகாம் பொறுப்பதிகாரி கேப்டன் டி.டி.பி.விஜேயசேன,மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.