கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் காலை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் மற்றும் மகளீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல், சுகாதாரம் மற்றும் உணவு, முன்பள்ளி செயற்படுகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இதனைவிட போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர்(காணி) நளாயினி இன்பராஜ், உதவி மாவட்ட செயலாளர் ஹ. சத்தியஜீவிதா, உதவிப் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உளவள ஆற்றுப்படுத்துனர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான விடயங்கள் குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை நடைபெற்றது.குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் காலை நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் மற்றும் மகளீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.மேலும் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல், சுகாதாரம் மற்றும் உணவு, முன்பள்ளி செயற்படுகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.இதனைவிட போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.இக் கலந்துரையாடலில் மேலதிக அரச அதிபர்(காணி) நளாயினி இன்பராஜ், உதவி மாவட்ட செயலாளர் ஹ. சத்தியஜீவிதா, உதவிப் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உளவள ஆற்றுப்படுத்துனர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.