• Nov 26 2024

கொவிட் தடுப்பூசி செலுத்தியோருக்கு ஏற்படும் நோய்கள்...? வைத்திய நிபுணர் விளக்கம்

Chithra / Jan 5th 2024, 10:09 am
image


 

கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம,

கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மூடநம்பிக்கைகள் காரணமாக தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத வயதினரே 33 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தியோருக்கு ஏற்படும் நோய்கள். வைத்திய நிபுணர் விளக்கம்  கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில் இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம,கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.மூடநம்பிக்கைகள் காரணமாக தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத வயதினரே 33 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement