• May 18 2024

ஊடகங்கள், சமூக வலைத்தளங்களுக்கு இடையூறு..? - அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 31st 2023, 1:27 pm
image

Advertisement

ஊடக நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், ஊடக சமத்துவத்தை பேணுவதற்காகவுமே ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களுக்கோ இடையூறு ஏற்படுத்தப்படாது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டம், ஊடக கட்டுப்பாடு அல்லது சமூக வலைத்தளங்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கானதல்ல என தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள ஊடக நிறுவனங்களுக்கு செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லை. அதற்கான தனியான சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே, சகல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் தற்காலிகமான அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளோம். 

தொலைக்காட்சி கூட்டுத்தாபன சட்டத்தின் உறுப்புரையொன்றை பயன்படுத்தியே அந்த அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். 

ஒலிபரப்பு நிறுவனங்களுக்கும் தற்காலிக அனுமதிப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன. அதுவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உறுப்புரையொன்றை பயன்படுத்தியே அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது வழங்கப்பட்ட நிபந்தனைகளும் ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும். இந்த விடயத்தில் சமத்துவம் பேணப்படவில்லை. 

இந்நிலையிலேயே இந்தச் சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளோம். சட்டமூலத்துக்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தவாரம் இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. 

சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவும் சகல நிறுவனங்களுக்கும் சமமான நிபந்தனைகளை வழங்குவதற்காகவுமே இது உருவாக்கப்படுகின்றது.

ஊடகங்களுக்கு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்பதுடன் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக கொண்டுவரப்படவில்லை என குறிப்பிட்டார்.

சகல ஊடக நிறுவனங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே சட்டமூலத்தை சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.

ஊடகங்கள், சமூக வலைத்தளங்களுக்கு இடையூறு. - அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia ஊடக நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்காகவும், ஊடக சமத்துவத்தை பேணுவதற்காகவுமே ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதனூடாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களுக்கோ இடையூறு ஏற்படுத்தப்படாது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,ஒளிபரப்பு வெளியீட்டு அதிகாரசபை சட்டம், ஊடக கட்டுப்பாடு அல்லது சமூக வலைத்தளங்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கானதல்ல என தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள ஊடக நிறுவனங்களுக்கு செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லை. அதற்கான தனியான சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. அதன் காரணமாகவே, சகல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் தற்காலிகமான அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளோம். தொலைக்காட்சி கூட்டுத்தாபன சட்டத்தின் உறுப்புரையொன்றை பயன்படுத்தியே அந்த அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஒலிபரப்பு நிறுவனங்களுக்கும் தற்காலிக அனுமதிப் பத்திரங்களே வழங்கப்பட்டுள்ளன. அதுவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உறுப்புரையொன்றை பயன்படுத்தியே அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது வழங்கப்பட்ட நிபந்தனைகளும் ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும். இந்த விடயத்தில் சமத்துவம் பேணப்படவில்லை. இந்நிலையிலேயே இந்தச் சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளோம். சட்டமூலத்துக்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தவாரம் இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. சட்டபூர்வமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவும் சகல நிறுவனங்களுக்கும் சமமான நிபந்தனைகளை வழங்குவதற்காகவுமே இது உருவாக்கப்படுகின்றது.ஊடகங்களுக்கு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே இது கொண்டுவரப்பட்டுள்ளது என்பதுடன் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக கொண்டுவரப்படவில்லை என குறிப்பிட்டார்.சகல ஊடக நிறுவனங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே சட்டமூலத்தை சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement