பாலாஜிக்காக கதறிய சிறுவனுக்கு பாலாஜி என்ன சொல்கிறார் தெரியுமா?

375

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேலும் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து ‘Simply waste’ என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அத்தோடு இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அதாவது டிவியில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்க, பாலாவுக்கு முதலிடம் கொடுக்கவில்லையென்று சிறுவன் ஒருவன் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்க்க முடிகிறது. அவனை தேற்றும் அவரது தாய் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த பிக்பாஸ் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையின் வீடியோவை பதிவிட்டு “அழாதே குட்டி பையா. உன்னுடைய அன்புதான் எனக்கு மிகப்பெரிய கப்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: