• Nov 24 2024

300க்கு குறைவாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி - 9 மாதங்களின் பின் ஏற்பட்ட மாற்றம்

Chithra / Mar 19th 2024, 3:09 pm
image



9 மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான  நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபாய் 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாவுக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 299 ரூபா வரையில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

300க்கு குறைவாக வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி - 9 மாதங்களின் பின் ஏற்பட்ட மாற்றம் 9 மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான  நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 229 ரூபாய் 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபாய் 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதியானது 322 ரூபாவுக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது 299 ரூபா வரையில் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Advertisement

Advertisement