• Apr 09 2025

இலங்கை ரூபாவுக்கு எதிராக டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பின்னணி - தலைகீழாக மாறுமென எச்சரிக்கை

Chithra / Mar 24th 2024, 8:45 am
image

 

இலங்கையில் டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். எனினும் இது நிரந்தமான ஒரு வளர்ச்சிப்படி இல்லையென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் தொகை 299 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து 250-260 ரூபாய் என்ற மட்டத்தை எட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள், அதே போல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாம் பெறும் அந்நிய செலாவணியின் அளவு கணிசமாக அதிகரிப்பது போன்றவை ரூபாவை மேலும் பலப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் உதவிகளும் ரூபாய் வலுவடைவதற்கு மற்றொரு காரணம். எனினும் வெளிநாட்டு கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன இறக்குமதிக்கான தடை அமுலில் உள்ளது.

பின்னணியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்குள் வரும் டொலர்கள் குறைந்து வெளியேறும் தொகை அதிகரித்தால், எல்லாம் தலைகீழாக மாறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ரூபாவுக்கு எதிராக டொலர் பெறுமதி வீழ்ச்சியின் பின்னணி - தலைகீழாக மாறுமென எச்சரிக்கை  இலங்கையில் டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். எனினும் இது நிரந்தமான ஒரு வளர்ச்சிப்படி இல்லையென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.தற்போது அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் தொகை 299 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.எதிர்வரும் காலங்களில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து 250-260 ரூபாய் என்ற மட்டத்தை எட்டக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள், அதே போல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாம் பெறும் அந்நிய செலாவணியின் அளவு கணிசமாக அதிகரிப்பது போன்றவை ரூபாவை மேலும் பலப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் உதவிகளும் ரூபாய் வலுவடைவதற்கு மற்றொரு காரணம். எனினும் வெளிநாட்டு கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகன இறக்குமதிக்கான தடை அமுலில் உள்ளது.பின்னணியில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைக்குள் வரும் டொலர்கள் குறைந்து வெளியேறும் தொகை அதிகரித்தால், எல்லாம் தலைகீழாக மாறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now