டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கமா?

120

அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான @realtonaldtrump பக்கத்தில் இருந்து சில ட்வீட்டுகள் செய்திருந்தார்.

இந்த ட்வீட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது.

மேலும், விதிமுறைகளை மீறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தை ட்வீட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது.
மேலும், டொனால்ட் டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனால் முதலில் 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பின்பு காலவரையின்றி தடை செய்ய வாய்ப்புள்ளது என பேஸ்புக் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்தார்.

இந்நிலையில், தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம் @realtonaldtrump என்ற பக்கத்தில் வரும் ட்விட்கள் வன்முறையை மேலும் தூண்டும் விதமாக உள்ள அபாயத்தின் காரணமாக கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது என்பதையும் பல ஆண்டுகளுக்குப் முன் தெளிவுபடுத்தினோம்.

எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம் என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: