• May 18 2024

மீனவர் பிரச்சினையில் அரசியல் செய்ய வேண்டாம்-சட்டத்தரணி சுகாஸுக்கு பகிரங்க எச்சரிக்கை!

Sharmi / Dec 9th 2022, 7:30 pm
image

Advertisement

கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (08) கிளிநொச்சி நீதிவான்  நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன்,

நேற்றைய தினம்(08)  கிராஞ்சி கடல் அட்டை பண்ணை எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்களுக்கான போராட்டத்தின் வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன் தெரிவித்துள்ளார்.

சில சட்டத்தரணிகள் மனம் திறந்து முன்வந்தார்கள்.அதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி சுபாஷ் பங்கு பற்றி இருந்தார். பின்பு அவர் ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டு இருந்தார்.

கடலட்டை பண்ணைக்கு எதிராக அனைத்து மீனவர்களும், அணிதிரள வேண்டும் என சட்டத்தரணி சுபாஷ் கூறியிருந்தார். கடலட்டை பண்ணை ஊடாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விடயத்தை எடுத்துரைத்தார்.அதனையும் நாங்கள் வரவேற்பதாக அவர் கூறினார்.

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலே ஒரு சிங்கள சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ஊடாக வடபகுதியில் இருக்கும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் முதுகெலும்பு இல்லையா? இந்த கிராஞ்சி மீனவர்களின் போராட்டம் சம்பந்தமாக இதுவரை யாரும் முன்வரவில்லை என்ற கேள்வி எழுப்பிய பிற்பாடு இன்று(08) நிறைய சட்டத்தரணிகள் அதற்காக ஆர்வம் செலுத்தி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கடலட்டைக்கு எதிராக மீனவர்களது போராட்டம் கிட்டத்தட்ட 69 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தை அந்த முதல் நாள் தொடக்கம் என்னால் அனைத்து தமிழ் தேசிய அரசியல் வாதிகளுக்கும், அரசியல் அனைத்து தரப்பினருக்கும், அறிவித்தேன்.

குறித்த தகவல் அறிந்திருந்தும் ஒரு சில குறிப்பாக  அங்கஜன் இராமநாதன் அதற்கான நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஊடகத்திலும் ,நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக உரையாடி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இது தொடர்பாக நேரடியாக பார்த்திருந்தார்.  இந்த 69 நாள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் தரப்பிலே இருக்கின்ற சட்டத்தரணியாக இருக்கட்டும் அல்லது அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவராக இருக்கட்டும்  மீனவர்களின் வலி அவர்களின் மனதில் சற்றேனும் ஒரு குத்தலோ உறுத்தலோ இருக்கவில்லை.

இன்றைய நாளில் அவர்கள் முன் வந்தார்கள்.அதனை பாராட்டுகின்றோம். மீனவர்கள் எவ்வளவோ அவமானங்களுக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அவர்கள் கொழும்பிற்குச் சென்று போராட்டத்தினை முன்னெடுத்தார்கள் ,குண்டர்களின் அடிகளுக்கு,விரட்டலுக்கும் மத்தியில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து போராட்டத்தினை நடத்தினார்கள்.

விசேடமாக சட்டத்தரணி சுகாஸ்க்கு கோரிக்கை ஒன்றினை முன்வைக்கிறேன்.இந்த மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு முன் வருவதாக இருந்தால் நிச்சயமாக வரவேற்கிறோம்.ஆனால் நீங்கள் அந்த தளத்திற்கு வரும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் வருவதாக இருந்தால் தயவு செய்து உங்கள் பயணத்தினை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்த போராட்டம் அரசியல் கட்சி சார்ந்த போராட்டம் அல்ல.இது ஒட்டு மொத்த மீனவ சமூக நலன் சார்ந்த போராட்டம்.கரையோர மீனவர்க்ளின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு வருவதாக இருந்தால் உங்களை வரவேற்கிறோம்.ஆனால் யாரும் அரசியல் சாயம் பூசிக்கொள்ள இதற்கு வருகை தருவதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் அதற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிப்பது மாத்திரம் அல்ல ,அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

ஆகவே சர்வதேச சமூகத்திடம் கூறுகிறோம் ,இந்த கடலட்டை போராட்டத்தினை வைத்துக்கொண்டு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் புலம்பெயர் சமூகத்திடமிருந்து நிதி உதவியையோ,ஆதரவினையோ கேட்பார்களாக இருந்தால் அதனை நீங்கள் போராட்டம் மேற்கொள்பர்களிடம் பேசி செய்து கொள்ளாம் ,ஆனால் அரசியல் கட்சிகளுடன் செய்துகொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினையில் அரசியல் செய்ய வேண்டாம்-சட்டத்தரணி சுகாஸுக்கு பகிரங்க எச்சரிக்கை கிராஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (08) கிளிநொச்சி நீதிவான்  நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிமன்றம் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தது.இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன்,நேற்றைய தினம்(08)  கிராஞ்சி கடல் அட்டை பண்ணை எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்களுக்கான போராட்டத்தின் வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன் தெரிவித்துள்ளார்.சில சட்டத்தரணிகள் மனம் திறந்து முன்வந்தார்கள்.அதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி சுபாஷ் பங்கு பற்றி இருந்தார். பின்பு அவர் ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டு இருந்தார்.கடலட்டை பண்ணைக்கு எதிராக அனைத்து மீனவர்களும், அணிதிரள வேண்டும் என சட்டத்தரணி சுபாஷ் கூறியிருந்தார். கடலட்டை பண்ணை ஊடாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விடயத்தை எடுத்துரைத்தார்.அதனையும் நாங்கள் வரவேற்பதாக அவர் கூறினார்.நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலே ஒரு சிங்கள சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ஊடாக வடபகுதியில் இருக்கும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் முதுகெலும்பு இல்லையா இந்த கிராஞ்சி மீனவர்களின் போராட்டம் சம்பந்தமாக இதுவரை யாரும் முன்வரவில்லை என்ற கேள்வி எழுப்பிய பிற்பாடு இன்று(08) நிறைய சட்டத்தரணிகள் அதற்காக ஆர்வம் செலுத்தி வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது.கடலட்டைக்கு எதிராக மீனவர்களது போராட்டம் கிட்டத்தட்ட 69 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த போராட்டத்தை அந்த முதல் நாள் தொடக்கம் என்னால் அனைத்து தமிழ் தேசிய அரசியல் வாதிகளுக்கும், அரசியல் அனைத்து தரப்பினருக்கும், அறிவித்தேன்.குறித்த தகவல் அறிந்திருந்தும் ஒரு சில குறிப்பாக  அங்கஜன் இராமநாதன் அதற்கான நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஊடகத்திலும் ,நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக உரையாடி இருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இது தொடர்பாக நேரடியாக பார்த்திருந்தார்.  இந்த 69 நாள் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் தரப்பிலே இருக்கின்ற சட்டத்தரணியாக இருக்கட்டும் அல்லது அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவராக இருக்கட்டும்  மீனவர்களின் வலி அவர்களின் மனதில் சற்றேனும் ஒரு குத்தலோ உறுத்தலோ இருக்கவில்லை.இன்றைய நாளில் அவர்கள் முன் வந்தார்கள்.அதனை பாராட்டுகின்றோம். மீனவர்கள் எவ்வளவோ அவமானங்களுக்கு மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கொழும்பிற்குச் சென்று போராட்டத்தினை முன்னெடுத்தார்கள் ,குண்டர்களின் அடிகளுக்கு,விரட்டலுக்கும் மத்தியில் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து போராட்டத்தினை நடத்தினார்கள்.விசேடமாக சட்டத்தரணி சுகாஸ்க்கு கோரிக்கை ஒன்றினை முன்வைக்கிறேன்.இந்த மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு முன் வருவதாக இருந்தால் நிச்சயமாக வரவேற்கிறோம்.ஆனால் நீங்கள் அந்த தளத்திற்கு வரும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் என்ற ரீதியில் வருவதாக இருந்தால் தயவு செய்து உங்கள் பயணத்தினை நிறுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் இந்த போராட்டம் அரசியல் கட்சி சார்ந்த போராட்டம் அல்ல.இது ஒட்டு மொத்த மீனவ சமூக நலன் சார்ந்த போராட்டம்.கரையோர மீனவர்க்ளின் வாழ்வாதாரத்தினை கருத்திற்கொண்டு வருவதாக இருந்தால் உங்களை வரவேற்கிறோம்.ஆனால் யாரும் அரசியல் சாயம் பூசிக்கொள்ள இதற்கு வருகை தருவதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் அதற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவிப்பது மாத்திரம் அல்ல ,அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.ஆகவே சர்வதேச சமூகத்திடம் கூறுகிறோம் ,இந்த கடலட்டை போராட்டத்தினை வைத்துக்கொண்டு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் புலம்பெயர் சமூகத்திடமிருந்து நிதி உதவியையோ,ஆதரவினையோ கேட்பார்களாக இருந்தால் அதனை நீங்கள் போராட்டம் மேற்கொள்பவர்களிடம் பேசி செய்து கொள்ளாம் ,ஆனால் அரசியல் கட்சிகளுடன் செய்துகொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement