• May 18 2024

நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த கல்முனை சிறுவன்...!samugammedia

Sharmi / Apr 27th 2023, 1:08 pm
image

Advertisement

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் 4B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக இனங்காணும்  ஆற்றலை பெற்று அதனூடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில் குறித்த மாணவனை பாடசாலை அதிபர் ஆசிரியர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இதேவேளை குறித்த மாணவன் கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் அம்மாணவன் ஒரு விஞ்ஞானியாக வருவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை  கமுஃகமுஃஅஸ்-ஸுஹறா வித்தியால அதிபர் எம் .எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா கருத்து தெரிவிக்கையில்,



இம்மாணவன் ஒழுக்க விழுமியமுள்ளவர்.அவரிடம் நான் கண்ட ஒரு வித்தியாசமான விடயம் யாதெனில், நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளிலும் அதற்குரிய நாட்களை கூறினார்.இவ்விடயம் குறித்து மாணவனின் பெற்றோரை அழைத்து கலந்தாலோசித்து இருந்தேன். சுமார் 10 வருடங்களுக்குரிய விடயங்களை அவரது ஞாபக சக்தி ஊடாக துல்லியமாக கூறுவதை அவதானித்தேன்.

அதாவது 2015 இல் இருந்து 2024 வரையிலான நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளையும் அவர் தெரிவிக்கின்றார்.எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என ஆசைப்படுகின்ற மாணவனை நானும் வாழ்த்துவதில் பெரும் மகிழச்சி அடைகின்றேன் என்றார்.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கருத்து தெரிவிக்கையில்,

எமது  கல்முனை வலயத்தில் 65 பாடசாலைகள் இருக்கின்றன.அந்த பாடசாலைகளில் கல்முனை கோட்டத்தில் இருக்கின்ற அஸ்-ஸுஹறா வித்தியாலத்தில் தரம் 4 இல் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற  நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் எல்லோரும் பிரமிக்க கூடிய வகையில் ஒரு அதிசயத்தை செய்து காட்டி இருக்கின்றார்.


அதாவது கடந்த 10 வருடங்களில் நாட்காட்டியில் தினங்களையும் ஆண்டையும்  கூறச்சொன்னால் ஒரு சில விநாடிகளில் சொல்லக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பதை பாராட்டுகின்றேன் என்றார்.


நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக கூறி வியக்க வைத்த கல்முனை சிறுவன்.samugammedia கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் 4B இல் கல்வி கற்கும் நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக இனங்காணும்  ஆற்றலை பெற்று அதனூடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.இந்நிலையில் குறித்த மாணவனை பாடசாலை அதிபர் ஆசிரியர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இதேவேளை குறித்த மாணவன் கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் அம்மாணவன் ஒரு விஞ்ஞானியாக வருவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கல்முனை  கமுஃகமுஃஅஸ்-ஸுஹறா வித்தியால அதிபர் எம் .எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா கருத்து தெரிவிக்கையில்,இம்மாணவன் ஒழுக்க விழுமியமுள்ளவர்.அவரிடம் நான் கண்ட ஒரு வித்தியாசமான விடயம் யாதெனில், நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளிலும் அதற்குரிய நாட்களை கூறினார்.இவ்விடயம் குறித்து மாணவனின் பெற்றோரை அழைத்து கலந்தாலோசித்து இருந்தேன். சுமார் 10 வருடங்களுக்குரிய விடயங்களை அவரது ஞாபக சக்தி ஊடாக துல்லியமாக கூறுவதை அவதானித்தேன்.அதாவது 2015 இல் இருந்து 2024 வரையிலான நாட்காட்டியில் உள்ள சகல திகதிகளையும் அவர் தெரிவிக்கின்றார்.எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என ஆசைப்படுகின்ற மாணவனை நானும் வாழ்த்துவதில் பெரும் மகிழச்சி அடைகின்றேன் என்றார்.கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கருத்து தெரிவிக்கையில்,எமது  கல்முனை வலயத்தில் 65 பாடசாலைகள் இருக்கின்றன.அந்த பாடசாலைகளில் கல்முனை கோட்டத்தில் இருக்கின்ற அஸ்-ஸுஹறா வித்தியாலத்தில் தரம் 4 இல் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற  நிஜாம் முஹம்மட் சாக்கிப் என்ற மாணவன் எல்லோரும் பிரமிக்க கூடிய வகையில் ஒரு அதிசயத்தை செய்து காட்டி இருக்கின்றார்.அதாவது கடந்த 10 வருடங்களில் நாட்காட்டியில் தினங்களையும் ஆண்டையும்  கூறச்சொன்னால் ஒரு சில விநாடிகளில் சொல்லக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பதை பாராட்டுகின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement