• May 19 2024

மலையக பாடசாலைகளில் போதை பொருள்- ஜீவன் தலையீடு!

crownson / Dec 8th 2022, 7:07 am
image

Advertisement

மலையக மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை வாகுக்கப்படுவதற்கா நேற்று பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது,

என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா  மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும்,  இதனால் மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர், என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், பல தரப்பினரும் முறையிட்டனர்.

இதனை அடுத்து விவகாரம் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரிஸ்ட பிரதி போலீஸ் மா அதிபரின் கவனத்திற்கு ஜீவன் தொண்மான் இந்த விடயத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாதிரி தலைமையில் நேற்று காலை இந்த கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருத பாண்டி ராமேஸ்வரன், இளையோர் அணி பொதுச் செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு தரப்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் அதிபர், நுவரெலியா மாவட்ட போலீஸ் அத்தியட்ச்சகர்கள், போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என்போர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் விழிப்புணர்வு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்கான குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் மாணவர்களை போதை பொருள் பாவணையில் இருந்து பாதுகாப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

சிரேஸ்ட் போலீஸ் மா அதிபரின் கட்டளைகளை மீறும் பட்சத்தில் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மலையக  தோட்ட பகுதிகள், நகர் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபடாது இருப்பதற்கு தனது பூரண ஒத்துழைப்பு தருவதாக ஜீவன் தொண்மான் உறுதியளித்தார்.

மலையக பாடசாலைகளில் போதை பொருள்- ஜீவன் தலையீடு மலையக மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை வாகுக்கப்படுவதற்காக நேற்று பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது, என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.நுவரெலியா  மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும்,  இதனால் மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர், என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், பல தரப்பினரும் முறையிட்டனர். இதனை அடுத்து விவகாரம் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரிஸ்ட பிரதி போலீஸ் மா அதிபரின் கவனத்திற்கு ஜீவன் தொண்மான் இந்த விடயத்தை கொண்டு வந்தார்.இந்நிலையில் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாதிரி தலைமையில் நேற்று காலை இந்த கூட்டம் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருத பாண்டி ராமேஸ்வரன், இளையோர் அணி பொதுச் செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு தரப்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் அதிபர், நுவரெலியா மாவட்ட போலீஸ் அத்தியட்ச்சகர்கள், போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என்போர் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் விழிப்புணர்வு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்கான குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் மாணவர்களை போதை பொருள் பாவணையில் இருந்து பாதுகாப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.சிரேஸ்ட் போலீஸ் மா அதிபரின் கட்டளைகளை மீறும் பட்சத்தில் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலையக  தோட்ட பகுதிகள், நகர் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருள் விற்பனை மற்றும் பாவனையில் ஈடுபடாது இருப்பதற்கு தனது பூரண ஒத்துழைப்பு தருவதாக ஜீவன் தொண்மான் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement